இலங்கை போர் முடிந்த பிறகு, ராஜபக்சே ரத்தம் குடித்ததை தவிர மிச்சம் இருக்கும் தமிழர்கள் நிலை எதிர்பார்த்ததை போலவே கவலையளிப்பதாக மாறியிருக்கிறது. முகாம்களில் வதைபடும் லட்சக்கணக்கான தமிழர்களை காட்டி சர்வதேச நாடுகளில் நிதி உதவியை பெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.
இதனால்தான் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், தமிழர்களுக்கான நிவாரண உதவிகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு முன்பே, தமிழர்களை கொன்று குவித்ததற்கு பரிசாக இந்திய அரசு ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்தது. பின்னர் இதை ரூ1000ம் கோடியாக உயர்த்தியது.
இப்போது ராஜபக்சே ஊர் ஊராக சென்று தமிழர்கள் மானத்தை விற்று பிச்சையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். மியான்மர் சென்றுள்ள ராஜபக்சே நிருபர்களிடம் கூறுகையில், புலிகளுக்கு எதிரான போரில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்திருக்கின்றனர் என்று நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார். இந்த நீலிக்கண்ணீரை நம்பி பரிதாபப்பட்ட மியார்மர் அரசு இலங்கைக்கு 50 ஆயிரம் டாலர் அதாவது ரூ.25 லட்சம் உதவித்தொகையை அள்ளிக்கொடுத்திருக்கிறது.
இப்படி ஊர் ஊராக பிச்சையெடுக்கும் ராஜபக்சே தொடர்ந்து தமிழர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றவும் திட்டமிட்டுள்ளார் என்பது உறுதியாகி இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment