Monday, June 8, 2009

சென்னை கொடூர கொலை: சட்டம் ஓழுங்கு சீர்குலைவு




சென்னையில் சுரேஷ்குமார் என்ற நகை வியபாரி கொடூரமாக வெட்டி கொலை செய்திருப்பது தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயின் கோவில் பூசாரியை கொன்று கோவிலை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
சுரேஷ்குமார் கொலைக்கு 2 நாட்களுக் முன்புதான் தமிழகத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் என்று கூறி சென்னை முழுவதும் வாகனசோதனை நடத்தினோம் என்றனர். ஆனால் சுரேஷ்குமாரை கொன்றவர்கள் உடலை வெட்டி 3 பகுதியாக பிரித்து சினிமா தியேட்டர் அருகே உள்ள தெருக்களில் சுதந்திரமாக வீசி சென்று இருக்கின்றனர். தீவிரவாதிகள் நடமாட்டத்துக்காக வாகனசோதனை நடத்திய போலீசாரிடம் இந்த மர்ம நபர்கள் மாட்டவில்லையா? இரவு ரோந்து போலீசாரின் நோக்கம் அப்பாவிகளை பிடித்து பணம் பறிப்பதுதான் என்பதும் தெளிவாகிறது. ஒழுங்காக வாகனசோதனை செய்தால் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாமே என்பது நம் எண்ணம்.
நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது கொலை கொள்ளைகள் சகஜமாகி வருகிறது. போலீஸ் கைகள் சுதந்திரமாக இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் கைகளில் நிறைய காசு புழங்கியது. அதன் தெனாவெட்டில் இப்போது நகரில் தங்கள் ராஜ்யத்தை தொடங்கியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் ரவுடிகளின் ஆதரவை கோரும் கட்சிகள் அவர்களை கண்டும் காணாமல் விட்டு விடுவது சட்டம் ஒழுங்குக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும்.
அடுத்த கொலை நடக்கும் முன்பாவது போலீசார் விழிப்படைய வேண்டும். செய்வார்களா?

No comments:

Post a Comment