Friday, June 5, 2009

பயணங்கள்




பயணங்கள் எப்போதும் இனிமையானவை. எனக்கு மட்டுமல்ல.பலருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். என் தாய் என்னை கர்ப்பத்தில் சுமந்தது ஞாபகம் இல்லை. ஆனால் என் பாட்டி என்னை அழைத்துக்கொண்டு அடிக்கடி போடிக்கும், வக்கம்பட்டி என்ற சிற்றூருக்கும் பஸ்சில் அழைத்து செல்வாள். போடியில் இருந்து பஸ் ஏறுவதற்கு முன்பு பை நிறைய பூந்தியும், அதிரசமும் அள்ளி எடுத்துக்கொள்வாள். இவையெல்லாம் பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுட சுட தயாராகும். பஸ்சில் வத்தலக்குண்டு தாண்டி வரும்போது சிறிய மேட்டு வளைவில் பஸ் ஏறுகையில் அந்த பகுதியை பார்ப்பதில் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு. வக்கம்பட்டியில் எங்களுக்காவே ரூட் பஸ் நிற்கும். போடியில் என் மாமா ஒரு நாளிதழின் நிருபராக இருப்பதால் டிரைவரிடம் முன் கூட்டியே சொல்லி விடுவதால் இந்த சலுகை. என் அம்மத்தாவுக்கு என் அம்மா ஒரே பெண் பிள்ளை என்பதால் இவ்வளவு பாசம். எனவே என்னை அம்மத்தாவே கூட்டிக்கொண்டு போய் போடியில் வளர்த்தாள்.
என் அம்மாவீட்டுக்கு வந்ததோடு நிற்கமாட்டாள் என் அம்மத்தாள் அடுத்ததாக சில கி.மீ. தூரத்தில் இருக்கும் அவளின் சகோதரி வீட்டுக்கு கிளம்புவாள். அது ஆறு, கால்வாய்களை கடந்து செல்லும் பயணம் மிக இனிமையாக இருக்கும். அந்த பயணத்தை நாளை சொல்கிறேன்.

No comments:

Post a Comment