Thursday, February 19, 2009

முதல் வணக்கம்

தினமும் அல்லலுறும் தேவை தேடலில் கொஞ்சம் இளைப்பாற இந்த வலைப் பூவில் தடம் பதித்திருக்கிறேன். தினமும் கொஞ்சம் போல் எழுதுவேன் என்ற எதிர்பார்ப்புடன் முதல் வணக்கம்.




குப்பை

வீட்டில் சேரும் குப்பை
தெருக்கோடியில்
மனதில் சேரும் குப்பை
எண்ணற்றவையாய்
எண்ணத் தொட்டியில்
ஆழப்பதிகிறது
கோபமாய்
அழுகையாய்
ஆத்திரமாய்
சந்தோஷமாய்
வெளிப்படுதலில்
நாற்றமடிக்கிறது
குப்பை
நம் எல்லோருள்ளும்.

1 comment:

  1. //தினமும் கொஞ்சம் போல் எழுதுவேன் என்ற எதிர்பார்ப்புடன் முதல் வணக்கம்.
    //

    வருக வருக !

    வாழ்த்துகள் !

    ReplyDelete